முகப்பு
நேரஞ்சல்
செய்திகள்
சிற்றலை ஒலிபரப்பு
ஒளிப்படங்கள்
பாடல்கள்
மாவீரர் மகுடம்
உங்கள் விருப்பம்
எம்மைப்பற்றி
விளம்பரம் செய்ய
தொடர்புகளுக்கு
 

 

எமது மக்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது,அதனின்றும் மக்களை விடுவித்து எமதுமக்களின்,சுதந்திரத்தையும்,பாதுகாப்பையும் நிலைநாட்டும் வரை, நாம் ஆயுதம் ஏந்திப் போராடுவதைக் கைவிடமாட்டோம்.



எமது அன்பிற்குரிய உலக வாழ் எம் உறவுகளே!

தமிழீழத்தின் தேசிய வானொலி நிறுவனமான புலிகளின்குரல் நிறுவனம் 1990ம் ஆண்டு தனது ஒலிபரப்புக்களை தாயகத்தில் ஆரம்பித்த நாள் முதல் இன்றுவரை தொடர்ந்து செயலாற்றி வருகின்றது. இதன் அடுத்த பரிமாணமாக 2005ம் ஆண்டு முதல் தனது ஒலிபரப்புக்களை இணையதளத்தில் ஆரம்பித்தது. அன்றிலிருந்து இன்று வரை எமது ஒலிபரப்புக்கள் உங்களின் காதுகளில் ஒலித்த வண்ணமே உள்ளன.

இன்று உலகளாவிய ரீதியில் எமது இணையத்தளத்தை நாளுக்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பார்வையிடுகின்றனர்.

காலத்துக்கேற்றபடி எமது இணையதள உருவாக்கத்திலும், பார்வையிடும் உங்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதிலும் எமது எல்லைகளை  விரித்து உங்களின் கண்களுக்கும் காதுகளுக்கும் தருகின்றோம். அப்படி எமது சேவைகள் விரிவடைந்து செல்கின்றபோது எமது தேவைகளும் அதிகரித்து செல்கின்றன.

ஒரு யுத்தம் நடைபெறும் தேசத்திலிருந்து நாளும் பொழுதுமென பதிவேற்றம் செய்யும் எமக்கு உங்களின் ஒத்துழைப்புக்களும் அவசியம் தேவைப்படுகின்றன.

எமது வர்த்தக வானொலியான தமிழீழவானொலியில் நீங்கள் உங்களின் விளம்பரங்கள், வாழ்த்துச்செய்திகள், சாவு அறிவித்தல்கள், மற்றும் பிற அறிவித்தல்களை இணைக்கும் வசதியினை இப்போது நாம் ஏற்படுத்தி தந்துள்ளோம், நீங்கள் இணைக்கும் ஒவ்வொரு அறிவித்தல்களும் உலகப்பரப்பிலும் தாயகத்திலும் கேட்கக் கூடிய வசதியினை புலிகளின்குரல் நிறுவனம் செய்துள்ளது.

நீங்கள் இணைக்கும் விளம்பரம் ஏதோ ஒரு வகையில் எமது ஒலிபரப்பின் வளர்ச்சிக்கு ஊன்று கோலாய் இருக்குமென்பது மட்டும் உண்மை.

இப்பொழுது எமது ஒலிபரப்புக்களை தாயகத்தில் பண்பலையிலும், உலகம் முழுவதும் இணையத்தளத்திலும் கேட்கும் வசதி இருந்தாலும் இன்னும் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப செய்ய வேண்டிய வேலைத்திட்டங்கள் நிறையவேயுள்ளன.

இந்த வகையில் தான் இப்பொழுது நீங்கள் எங்கிருந்தாலும் உங்களின் கையடக்க தொலைபேசியில் எமது ஒலிபரப்புக்களை கேட்க கூடிய வசதிகளை செய்துள்ளோம்.

அத்துடன் "இணையவலை வானொலி" ஊடாகவும் எமது ஒலிபரப்புக்களை நீங்கள் தற்பொழுது கேட்க முடியும்.

அதனால், எமது புலம்பெயர் உறவுகளாகிய நீங்கள் எமக்கு உங்களின் வர்த்தக விளம்பரங்களை தந்துதவுங்கள், எமது இணையத்தள வளர்ச்சிக்கும் எமது அடுத்த கட்ட செயற்பாடுகளுக்கும் நம்பிக்கையுடன் உங்கள் கைகளை பற்றி விடைபெறுகின்றோம்.

நன்றி
புலிகளின்குரல்  நிறுவனம்
தமிழீழம்
01 சனவரி 2009

 
Banner


 
 
 

 

Copyright (c) Pulikalinkural Online Service  2005 - 2009 - All rights reserved.